×

நன்னிலம் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

திருவாரூர் : நன்னிலம் ஒன்றிய பகுதியில் அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அதன்படி, திருவாஞ்சியம் ஊராட்சியில் ரூ.3 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் மேர்காணமங்கலம் தெற்கு தெருவில் அமைக்கப்பட்டு வரும் சாலை, ரூ.5 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் மேர்கணமங்கலம் 2வது தெற்குதெருவில் அமைக்கப்பட்டு வரும் சாலை, ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் ஒமக்குளம் அருகில் அமைக்கப்பட்டு வரும் சாலை வசதி ஆகிய வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இதேபோல, ரூ.4 லட்சத்து 40 ஆயிம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பசுமை குடில், ரூ.11 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் அய்யனார் குளம் தூர்வாரப்படும் பணி, குளத்திலுள்ள குளியலறையில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணி, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நாடாக்குடி பகுதியிலுள்ள நியாயவிலை கடை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மேலும் ரூ.5 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் நெல் உலரவைக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும், ரூ.5 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் தெற்குதெருவில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டு வருவதையும், ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் தட்டாத்திமூலை ஊராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்காக கட்டப்பட்டு வரும் கழிவறை, ரூ.6 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு பணிகளை விரைந்தும், உரிய தரத்துடனும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ஆர்.டி.ஓ சங்கீதா, நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணரமேஷ், ராஜ்குமார், பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, செல்வசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post நன்னிலம் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : EUM ,Thiruvarur ,Nannalam Union ,Edience Union ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்